முகக்கவசங்களுக்கு மலேசியாவிலும் தேவை அதிகரிப்பு

கோலாலம்பூர்: உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் முகக்கவசங்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது. இருப்பினும், மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக முகக் கவசங்கள் கிடைக்கவில்லை என்று மருந்தாளர்கள் கூறியுள்ளனர். 

உள்ளூர் முகக்கவச தயாரிப்பாளர்கள் நாள் ஒன்றுக்கு 400,000 முகக்கவசங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மலேசிய உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதின் நசுசோன் இஸ்மாயில் இம்மாதம் 7ஆம் தேதி கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக முகக்கவ சங்கள் விற்கப்படுகின்றன. சாதாரண முகக்கவசங்கள் தலா 80 மலேசிய காசுக்கும் N95 முகக்கவசங்கள் தலா 6 ரிங் கிட்டுக்கும் விற்கப்படுகின்றன. 

“சமூக மருந்துக் கடைகளில் குறிப்பாக சாபா, சரவாக், கிராமப்புறக் கடைகளில் மக்கள் அதிகமான அளவில் முகக்கவசங்கள் வாங்கிக் குவிப்பதால் அங்கு அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முகக்கவசங்களுக்கு அதிக விலை கிடைப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் முகக்கவசங்களை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே விரும்புகின்றனர்.

“உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலேசிய மக்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து முகக்கவசங் களைச் சேமித்து வைப்பதற்கு அரசாங்கம் அவர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று மலேசிய மருந்தியல் சங்கத்தின் தலைவர் அம்ராஹி புவாங் தெரிவித்தார்.