வூஹான் மருத்துவர் கொரோனா கிருமித்தொற்றால் மரணம்

வூஹான்: வூஹான் மருத்துவமனையில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 29 வயது மருத்துவர் பெங் யின்ஹுவா அதே கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார் என்று உள்ளூர் சுகாதார அறிக்கை தெரிவித்தது. 
அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக் கப்பட்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் பெங், நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.