கொவிட்-19: சீனாவில் புதிதாக 409 பேருக்கு தொற்று; 150 பேர் பலி

சீனாவில் புதிதாக 409 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று (பிப்ரவரி 24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் 31 மாநிலங்களில் புதிதாக 150 பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்துள்ளனர் என்றும் சீன சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவில் புதிதாக 409 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று (பிப்ரவரி 24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் 31 மாநிலங்களில் புதிதாக 150 பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்துள்ளனர் என்றும் சீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்த மரணங்களில் 149 ஹுபெய் மாநிலத்திலும் ஒன்று ஹைனான் மாநிலத்திலும் நிகழ்ந்தன.

நேற்றுவரை மொத்தம் 24,734 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,846 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

சீனா முழுவதும் பரவியுள்ள கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த 99.5 பில்லியன் யுவான் (S$19.79 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் துணை நிதியமைச்சர் ஓவ் வென்ஹென் இன்று தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வூஹானிலிருந்து, அந்த நகரவாசிகளல்லாதோர் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக வூஹானுக்குச் சென்றிருந்தவர்கள், கிருமித்தொற்று காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது அந்த நடைமுறை சற்று தளர்த்தப்பட்டுள்ளது. கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அவர்கள் கிருமிதொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை என்றால் அங்கிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, யுன்னான், குவாங்டோங், ஷான்ஸி, குவிஸோ ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று அபாய நிலையை சீனா குறைத்துள்ளது.

#வூஹான் #கொரோனா #கொவிட்-19 #சீனா

வூஹான்
கொரோனா
கொவிட்-19
சீனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!