அறிகுறியில்லா கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆதாரம் இல்லை

அறிகுறியில்லா ஒருவரிடமிருந்து கொரோனா கிருமி பரவுவதற்கு வலுவான ஆதராம் இல்லை என்று தேசிய தொற்று நோய் சிகிச்சை நிலையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷோன் வாசு தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று புதிய இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளிவந்த கடிதம் ஒன்றில் இது சாத்தியம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிய டாக்டர் வாசு, அது சாத்தியமல்ல என்று நிரூபிக்கப் பட்டுள்ளது என்றார். ஜெர்மனியில் தாம் சந்தித்த சீன மாது ஒருவரிமிருந்து ஜெர்மனி வர்த்தகர் ஒருவருக்கு கிருமி தொற்றியது என்று முனிக்கின் மெக்சிமிலியன் பல்கலைக் கழகத்தின் மருத்துவர்கள் அந்தக் கடிதத்தை எழுதியி ருந்தனர். ஆனால், அந்த மாது ஷங்காய்க்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் நோய்வாய்ப்பட்டு, பின்னர் கொரோனோ கிருமித்தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட் டது என்று டாக்டர் வாசு விளக்கினார்.