சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் நாட்டவருக்கு கொரோனா கிருமித்தொற்று

சிங்கப்பூரில் உள்ள தனது நாட்டு குடிமகன் ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதுவே தனது நாடு தொடர்பான முதலாவது கிருமித்தொற்று சம்பவம் என்றும் சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.  பாதிக்கப்பட்டவர் தற்போது ஒரு சிங்கப்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அந்நபரின் விவரத்தை வெளியிட முடியாது என்று தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.

“பிலிப்பீன்ஸ் தூதரகம் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நோயாளிக்குத் தேவைப்படக்கூடிய தூதரக உதவிகளைச் செய்ய தயாராக உள்ளது,” என்றும் தூதரகம் கூறியது.