இத்தாலியில் குறைந்தது 10 நகரங்களில் தடை உத்தரவு; பள்ளிகள் மூடல்

ரோம்: இத்தாலியில் அண்மைய நாட்களில் 150 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்பட்டிருக்கும் வேளை யில் அதன் அரசாங்கம் மிலான் நகருக்கு அருகில் உள்ள குறைந்தது பத்து நகரங்களில் தடை உத்தரவை அமல் படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. பிரபலமான வெனிஸ் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லொம்பாடி வட்டாரத்திலிருந்து வந்தவர்கள். அங்கு கிட்டத்தட்ட 50,000 பேர் தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிறப்பு அனுமதியுடன்தான் அங்கிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். இதற்கிடையே, இத்தாலி நேற்று தனது நான்காவது கொரோனா கிருமித்தொற்று மரணத்தை உறுதி செய்தது. 84 வயதான அந்த முதியவர் லொம்பாடி வட்டாரத்தில் வசித்தவர்.