கொவிட்-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு கிருமித்தொற்று; ஐவர் வீடு திரும்பினர்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஐவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று (பிப்ரவரி 25) சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

இங்கு மேலும் ஒருவருக்கு புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆகியுள்ளது.

அவர்களில் 58 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 83வது நபரின் மனைவி இவர் . ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்’ தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றில் தொடர்புடையவர். 

மருத்துவமனையில் சிகிச்சசிபெற்று வரும் எஞ்சிய பெரும்பாலோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. 7 பேர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19 #தமிழ்முரசு