சிங்கப்பூரில் மேலும் இருவர் கிருமியால் பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் இரு புதிய கிருமி பாதிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவற்றுடன் சேர்த்து மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 93க்கு அதிகரித்துள்ளது. இவர்களில் 62 பேர் முழுமையாக குணமடைந்துவிட்டனர்.

நேற்று மட்டும் நால்வர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக அமைச்சு தெரிவித்தது.

குணமடைந்தவர்களில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும் ஒருவர்,

 

‘நிறுவனங்கள், ஊழியர்களுக்கு விரைவாக உதவ வேண்டும்’

கொரோனா கிருமி பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் விரைவாக உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். வரவு செலவு திட்ட விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய வெஸ்ட் கோஸ்ட் தொகுதி உறுப்பினர் பேட்ரிக் டே, கடந்த வாரம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்த 4 பில்லியன் வெள்ளி நீடித்த ஆதரவுத் திட்டம் முழுமையாக இருந்தாலும்  மேலும் உதவிகள் தேவைப்படலாம் என்று குறிப்பிட்டார்.