நியூசிலாந்தையும் எட்டிப்பிடித்த கொவிட்-19

நியூசிலாந்தில் ஒருவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 28) உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஆடவர் ஈரானுக்கு அண்மையில் சென்று திரும்பியவர் என்று கூறப்பட்டது. 60களில் இருக்கும் அந்த ஆடவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

“நியூசிலாந்தில் கொரோனா கிருமித்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டாலும் இங்கு சமூகப் பரவலுக்கான வாய்ப்பு குறைவு,” என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட ஆடவர் ஆக்லாந்து சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலை மேம்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#கொரோனா #கொவிட்-19 #நியூசிலாந்து