தென்கொரிய தேவாலயத்தின் உறுப்பினர்கள் வூஹான் சென்றுவந்த தகவல் வெளியானது

கிருமி பரவல் பெருகியிருக்கும் டேகு நகரில் நோயாளிகளைக் கொண்டு செல்ல தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவசர மருத்துவ வாகனங்கள். படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சீனாவுக்கு வெளியே அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தென்கொரியாவில் கொவிட்-19 என்னும் கொரோனா கிருமி தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று 3,526க்கு அதிகரித்தது. நேற்று மட்டும் அங்கு புதிதாக 376 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலகின் 12வது பொருளியல் நாடான தென்கொரியா தற்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறது. தென்கிழக்கு நகரான டேகுவில் உள்ள தேவாலயத்தில் இருந்துதான் ஏராளமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

தேவாலயத்தின் 260,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதால் ஒவ்வொரு நாளும் புதிதாக பதிவாகும் சம்பவங்களின் எண் ணிக்கை பெருகி வருகிறது. கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் மாண்டுவிட்டனர்.

நாட்டின் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களில் 90 விழுக்காடு டேகு தேவாலயம் மற்றும் அருகில் உள்ள தென் கியோங்சாங் மாநிலம் ஆகியன தொடர்பானது என கேசிடிசி எனப்படும் கொரிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

தேவாலயத்தில் நான்கு வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துகொண்ட 61 வயதுப் பெண் சென்ற மாதம் 10ஆம் தேதி முதன்முதலாக பாதிக்கப்பட்டார். அப்போது முதல் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேவாலயத்தின் சில உறுப் பினர்கள் கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுவந்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளதாக கேசிடிசி நேற்று தெரிவித்தது. இந்தத் தேவாலயத்திற்கு வூஹான் நகரில் ஒரு கிளை உண்டு. ஜனவரி மாதம் அங்கு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க டெகு நகரிலிருந்து சிலர் சென்றதை கேசிடிசியின் அதிகாரியான குவோன் ஜு-ஊக் கூறினார். இருப்பினும் எத்தனை பேர் சென்றார்கள் என்பதும் தென்கொரியாவில் கிருமி பரவ அவர்களின் அந்தப் பயணமும் ஒரு காரணமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.

இந்நிலையில் சுதந்திர இயக்க நாளைக் குறிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளியல் வீழ்ச்சியிலிருந்து மீள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!