1,900க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இன்னும் சீனாவில் உள்ளனர்

வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையின்படி 1,900க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இன்னும் சீனாவில் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் இன்று தெரிவித்தார்.

ஆனால் துல்லியமாகக் கணக்கிட்டால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் ஹுபே மாநிலத்தில் சிங்கப்பூரர் ஒருவர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை அமைச்சு அறிந்திருப்பதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஆடவரை பெய்ஜிங்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தொடர்புகொண்டு உதவி வழங்க முன்வந்ததாகவும் அந்த ஆடவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியெக் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று சீனாவிலும் உலகெங்க்கிலும் பரவிவரும் நிலையில் வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்கள் இணையம் மூலம் வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்துகொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அவசரகாலத்தில் சிங்கப்பூரர்களைத் தொடர்புகொண்டு உதவி நல்க அது வழியமைக்கும் என்றார் அமைச்சர்.
முந்தைய காலத்தைவிட சிங்பாஸ் மொபைல் (Singpass Mobile) மூலம் மிகவும் எளிதாக மின் பதிவு செய்ய வழிசெய்யப்பட்டுள்ளதையும் அறிவார்ந்த தேசம் (smart nation) முயற்சிக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சரான டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

சீனாவிலுள்ள சிங்கப்பூர் சமூகத்துடன் பெய்ஜிங்கில் உள்ள தூதரகமும் ‌‌‌ஷாங்ஹாய், குவாங்க்சொவ், செங்டு, சியாமென் ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகமும் அணுக்கமான தொடர்பில் உள்ளதாக அமைச்சர் விளக்கினார்.
“உதவி தேவைப்படும் எந்த சிங்கப்பூரரும் தூதரகங்களில் உள்ள அதிகாரிகளை எந்த நேரத்திலும் அணுகலாம்,” என்று அமைச்சர் கேட்டுகொண்டார்.

ஹுபேயிலிருந்து இரண்டு ஸ்கூட் விமானங்களில் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்ட 266 சிங்கப்பூரர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமைச்சுடன் பதிவு செய்திருந்தனர் என்றும் அது அவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் வருகையை ஏற்பாடு செய்ய எளிதாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் வந்தடைந்ததும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் எழுவருக்கு கிருமி தொற்றியிருந்தது என்று கூறிய அவர் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சில் வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உழைத்த அதிகாரிகளுக்குத் தமது பாராட்டை அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.

சீனாவில் இன்னும் ஏன் சிங்கப்பூரர்கள் இருக்கின்றனர் என்று மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லிம் பியாவ் சுவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டாக்டர் விவியன், சிங்கப்பூர் வராததற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு தனிப்பட்ட காரணம் இருக்கும் என்றார்.

ஆனால் அனைத்து குடும்பங்களுடனும் தொடர்பில் இருந்து இயன்றவரை உதவி நல்கும் நிலையில் அமைச்சு உள்ளது என்பதுமே முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றார் அமைச்சர்.

#கொரோனா #தமிழ்முரசு #சிங்கப்பூர் #corona #covid-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!