கொவிட்-19 தொடர்பில் இனவாத கருத்து; சிங்கப்பூர் இளையர் மீது லண்டனில் தாக்குதல்

தாக்குதல் குறித்து ஜொனாதன் மோக் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று அதிகாலை வேளையில் பதிவிட்டிருந்தார். கண் வீங்கியிருப்பதைக் காட்டும் இரண்டு புகைப்படங்களையும் அவர் பதிவேற்றி உள்ளார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான பிரிவினைவாத கருத்துகளுடன் சிங்கப்பூர் இளையர் ஒருவர் லண்டனில் தாக்கப்பட்டதன் தொடர்பில் லண்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

‘இனரீதியிலான மோசமான தாக்குதல், டோட்டென்ஹாம் கோர்ட் ரோடு நிலையத்துக்கு அருகில் உள்ள ஆக்ஸ்ஃபர்ட் ஸ்திரீட்டில் கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் நிகழ்ந்ததாக பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“தாக்கப்பட்ட 23 வயது இளையருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன,” என்றார் அவர்.

போலிஸ் தரப்பில் இளையரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் சட்டத்துறையில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர் ஜொனாதன் மோக் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஜொனாதன் மோக் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று அதிகாலை வேளையில் பதிவிட்டிருந்தார்.

கண் வீங்கியிருப்பதைக் காட்டும் இரண்டு புகைப்படங்களையும் அவர் பதிவேற்றி உள்ளார்.

சம்பவத்தன்று ஓர் இளையர் கும்பலைத் தாண்டிச் சென்ற திரு மோக்குக்கு அவர்கள் தம்மை நோக்கி ‘கொரோனாவைரஸ்’ என்று கூறியது காதில் விழுந்ததாகவும் அதனால் அவர்களைத் திரும்பிப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் திரு மோக்.

“எவ்வளவு துணிச்சல் இருந்தால் திரும்பிப் பார்ப்பாய்...,” என்று கூறியபடி மீண்டும் மீண்டும் திரு மோக்கின் முகத்தில் குத்தியது அந்தக் குழு. அந்த வழியாகச் சென்ற சிலர் திரு மோக்கை அதிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்ததாக பதிவு குறிப்பிடுகிறது.

முகத்தில் மீண்டும் குத்துவதற்கு முன்பு ஓர் ஆடவர், “உன்னுடைய கொரோனா கிருமி என் நாட்டிற்கு வேண்டாம்,” என்று குறிப்பிட்டதாகவும் திரு மோக் நினைவுகூர்ந்தார்.

சம்பவ இடத்துக்கு போலிசார் வருவதற்கு முன்பாகவே தாக்குதலில் ஈடுபட்ட இளையர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் காணும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். விசாரணை, உள்சுற்று கண்காணிப்பு கேமரா காணொளி போன்றவற்றைக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தனது முகத்தில் சில எலும்புகள் முறிந்திருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் தாம் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்ததாக திரு மோக் குறிப்பிட்டார்.

“என்னை நோக்கி ஒருவர் இனவாத கருத்துகளை வெளியிடும்போது நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?” என்று தமது பதிவில் கேள்வியை எழுப்பியுள்ளார் திரு மோக். அவரது பதிவு 3,500க்கும் அதிகமான கருத்துகளையும் 2,000க்கும் அதிகமான பகிர்வுகளையும் கொண்டுள்ளது.

#கொரோனா #சிங்கப்பூர் மாணவர் #லண்டன் #தமிழ்முரசு

கொவ்ட்-19
கொரோனா
சிங்கப்பூர் மாணவர்
லண்டன்
தாக்குதல்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!