இணையவாசிகளை ஈர்க்கும் 'கொரோனா' காணொளி; வியட்னாமின் வெளியீடு

பாடகர்கள் எரிக், மின் ஆகியோர் பாடிய “Jealous” எனும் பாப் இசைப் பாடலின் (“Ghen” எனும் வியட்னாமிய பாடல்) ராகத்தில் அமைந்துள்ள “push back the virus Corona, Corona” எனும் பாடலை உயிரோட்டக் காணொளியாக வியட்னாம் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைச் சமாளிக்கும் வழிமுறைகளை விளையாட்டாக எடுத்துக்காட்டும் விதத்தில் வியட்னாமிய மொழியில் காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘டிக்டோக்’ காணொளிச் செயலியில் வெளியான இந்தக் காணொளி 2 மில்லியனுக்கும் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Remote video URL

பாடகர்கள் எரிக், மின் ஆகியோர் பாடிய “Jealous” எனும் பாப் இசைப் பாடலின் (“Ghen” எனும் வியட்னாமிய பாடல்) ராகத்தில் அமைந்துள்ள “push back the virus Corona, Corona” எனும் பாடலை உயிரோட்டக் காணொளியாக வியட்னாம் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

தனிநபர் சுகாதாரப் பழக்கவழக்கங்களான கைகளை முறையாகக் கழுவுதல், வேலையிடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், முகத்தைக் கைகளால் தொடுவதைத் தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தும் இந்தக் காணொளி கொரோனாவின் பிறப்பிடம், அது எவ்வளவு கொடியது என்பதையும் விவரிக்கிறது.

வியட்னாமில் இதுவரை 16 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் வியட்னாம், கொரோனா கிருமித்தொற்று பரவலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஒரு கிராமத்தில் ஐவருக்கு கிருமித்தொர்று ஏற்பட்டதையடுத்து, அந்த கிராமமே தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#வியட்னாம் #கொரோனா #காணொளி

வியட்னாம்
கொரோனா
காணொளி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!