'சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லும் ஆரோக்கியமான பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை'

பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் முகக்கவசங்களுடன் காணப்படும் பயணிகள். படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லும் ஆரோக்கியமான பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சிங்கப்பூரில் உள்ள தாய்லாந்து தூதரகம் இன்று (மார்ச் 4) விளக்கமளித்துள்ளது.

ஆனால், தாய்லாந்துக்கு வரும் பயணிகள் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளிலிருந்து தாய்லாந்துக்கு செல்லும் பயணிகள் 2 வாரங்களுக்கு தாமாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேங்காக்கில் சுகாதார அதிகாரிகள் இன்று குறிப்பிட்டிருந்தனர்.

தாய்லாந்து அதிகாரிகள் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், புதிய ‘உயர் அபாய’ நாடுகளின் பட்டியல் இறுதிபடுத்தப்படும் வரை தாமாகவே தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டது.

அதனை அடுத்து, அனைத்து நாட்டுப் பயணிகளையும் வரவேற்பதாகவும் ஆரோக்கியமாக இருக்கும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் சிங்கப்பூரில் உள்ள தாய்லாந்து தூதரகம் விளக்கம் அளித்தது.

தாய்லாந்து நாட்டு சட்டப்படி, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகளிலிருந்து மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை, 100,000 பாட் (S$4,430) வரை அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

‘உயர் அபாய’ நாடுகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு இந்தச் சட்ட விதிமுறை நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தனிநபர்களின் உடல்நிலை எவ்வாறு தினமும் கண்காணிக்கப்படும் என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.

தாய்லாந்தில் தாங்கள் தங்கப்போகும் இடம் பற்றிய சரியான தகவல்களை வழங்காதவர்கள், திருப்பி அனுப்பப்படுவர் என்றும் பொதுச் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் சிங்கப்பூரர்கள் தாய்லாந்துக்கு சென்று வருகின்றனர்.

தாய்லாந்தில் இதுவரை 43 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால், அவருக்கு டெங்கி தொற்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19
கொரோனா
தாய்லாந்து
சிங்கப்பூர்
பேங்காக்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!