கிருமித்தொற்று உலக நிலவரம் 13-03-2020

தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள ரச்சபிரசோங் கடைத்தொகுதி வட்டாரத்தில் முகக்கவசத்துடன் செல்லும் மக்கள். படம்: ஏஎப்பி

மலேசியாவில் சமூகப் பரவல்

கொரோனாத் தொற்று பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்லாத, பாதிப்புள்ள எவருடனும் தொடர்பில் இல்லாத ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மலேசியாவில் சமூகப் பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று காலை வரையில் மொத்தம் 149 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் 26 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இந்தியா: வெளிநாட்டினருக்குத் தடை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 57 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். கேரளாவில் 17 பேர், மஹாராஷ்டிராவில் 11 பேர், உ.பி.யில் 10 பேர், டில்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா வெளிநாட்டினருக்கான விசாவை ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்து, வெளிநாட்டினர் வருகையை கட்டுப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பள்ளிகள் மூடல்

கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இலங்கையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நேற்று முதல் இம்மாதம் 26ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் இருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சில் தலைவர்களுக்கு தொற்று

பிலிப்பீன்சில் கொரோனா கிருமித்தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சர் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டர்டே கொரோனா கிருமித் தொற்று சோதனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நேற்று வரையில் 52 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குவைத்தில் பொது விடுமுறை

குவைத்தில் 25 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் ஈரானுடனான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பஹ்ரேனில் 26 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ள னர். இதையடுத்து குவைத் அரசு, மார்ச் 29-ம் தேதி வரை பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைக்கு மாறு மக்களுக்கு குவைத் அரசு அறிவுறுத்தி உள்ளது. குவைத் அனைத்துலக விமான நிலையம் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படும். விமான நிலையத்திலிருந்து புறப்படும் வணிக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இத்தாலியில் கடைகள் மூடல்

இத்தாலியில் கொரோனா கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றுமுன்தினம் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது. 12,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இறப்பு 33% வரை அதிகரித்ததை அடுத்து இத்தாலியில் உணவுக் கடைகள், மருந்தகங்கள், போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் ்வரும் 25 தேதி வரை மூடுமாறு இத்தாலியப் பிரதமர் கியூசெப் கோன்டே உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்து, அஞ்சலக சேவை, நிதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கும் எனவும் அத்தியாவசியமில்லாத கடைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி வீட்டு விநியோகங் களையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இதுவரையிலும் 17,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக ஐரோப்பிய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களில் பாதிக்கு மேலானவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.

ஜெர்மனியில் பாதிப்பு அதிகரிக்கும்

ஜெர்மனியில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 1963 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். 24 பேர் நோய் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். “ஜெர்மனியில் இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். தற்போதைய மக்கள் தொகையில், கொரொனோ வைரசால் 60% முதல் 70% பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்” ஜெர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.
எகிப்து, அல்ஜீரியா, ஆஸ்திரியா, குரேஷியா, ருமேனியா, ஸ்பெயின், வடக்கு மெக்டோனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது.பிரான்சில் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டாவது ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்திலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது.

தாய்லாந்து: விசா மறுபரிசீலனை

தாய்லாந்து தனது 18 நாடுகளுக்கான நாட்டில் இறங்கியதும் வழங்கப்படும் விசா, கிருமித்தொற்று அதிகமுள்ள தென்கொரியா, ஹாங்காங், இத்தாலி ஆகிய நாடு களுக்கான பயணிகளின் விசா இல்லாத நுழைவுக்கான அனுமதியை ஆகியவற்றை ரத்து செய்வதும் குறித்த தனது திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து இம்மாதம் 17ஆம் தேதி அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!