ஆஸ்திரேலியா: வெளிநாட்டினர் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

புதி­தாக அமைக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வை­ கூட்­டத்தை நடத்­தி­யதை அடுத்து ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் இப்­பு­திய அதி­ரடி நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தார். படம்: ஊடகம்

சிட்னி: வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரும் பய­ணி­கள் தங்­களை 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். நேற்று நள்­ளி­ரவு முதல் இது நடப்­புக்கு வந்­தது. அத்­து­டன் வெளி­நாட்டு துறை­மு­கங்­க­ளி­லி­ருந்து வரும் உல்­லா­சக் கப்­பல்­ களை­யும் அடுத்த 30 நாட்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லியா அனு­ம­திக்­காது.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நியூ­சி­லாந்து விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­ க­ளைப் போலவே ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இப்­போது விதித்­துள்­ளது.

புதி­தாக அமைக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வை­ கூட்­டத்தை நடத்­தி­யதை அடுத்து ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் (படம்) இப்­பு­திய அதி­ரடி நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தார்.

கிரு­மித்­தொற்று உச்­சத்­தைத் தொடு­வ­தற்­குள் அதைக் கட்­டுப்­ ப­டுத்த இக்­க­டு­மை­யான நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக திரு மோரி­சன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­முள்ள இத்­தாலி, தென் கொரியா, ஈரான், சீனா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோரை அனு­ம­திக்­காது என்று ஆஸ்­தி­ரே­லியா அறி­வித்­தி­ருந்­தது.

இதன்­படி இந்த நான்கு நாடு­ க­ளைச் சேர்ந்­தோர் 14 நாட்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் வர அனு­ ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள்.

ஆனால் இந்­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பும் ஆஸ்­தி­ரே­லி­யர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். இருப்­பி­னும் இரு வாரங்­ களுக்கு அவர்­கள் தங்­களை வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

ஒரு மீட்­டர் தொலை­வில் இருப்­பது, கை குலுக்­கா­மல் இருப்­பது போன்ற சமூ­கப் பொறுப்­பு­ணர்வு பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கு­மாறு பிர­த­மர் மோரி­சன் யோசனை கூறி­னார்.

இதற்­கி­டையே 500 பேருக்கு மேல் கலந்­து­கொள்­ளக்­கூ­டிய கூட்­டங்­க­ளுக்­குத் தேவை இருந்­தால் மட்­டுமே ஏற்­பாடு செய்­யு­மாறு ஆஸ்­தி­ரே­லியா அறி­வு­றுத்­தி­யுள்­ளது. ஆனால் இது பள்­ளி­க­ளுக்­கும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கும் பொருந்­தாது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 250க்கும் மேற்­பட்ட கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. அத்­ துடன் மூவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!