'சிங்கப்பூருக்குள் வரும்போது 90 விழுக்காட்டினருக்கு அறிகுறிகள் தென்படவில்லை'

வெளிநாடுகளிலிருந்து கடந்த 18 முதல் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்குள் வந்த பத்தில் 9 பேர், எல்லை சோதனைச் சாவடிகளைக் கடக்கும்போது அவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. படம்: இபிஏ

வெளிநாடுகளிலிருந்து கடந்த 18 முதல் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்குள் வந்த பத்தில் 9 பேர், எல்லை சோதனைச் சாவடிகளைக் கடக்கும்போது அவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் காரணமாக, அவர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது என்று நேற்று (மார்ச் 23) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று நாட்களில் சிங்கப்பூருக்குத் திரும்பி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர், சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் அறிகுறிகள் தென்பட்டு மருத்துவர்களை அணுகினர் என்றும் சோதனைச் சாவடிகளைக் கடந்து உள்ளே வரும்போது அவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றும் அமைச்சு விளக்கியது.

சிங்கப்பூருக்குள் வரும் பயணிகள் வெப்பநிலைமானிகளைக் கடக்கும்போது அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் அடையாளம் காண முடியும். மேலும், சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு நாசித் திரவ சோதனையும் மேற்கொள்ளப்படும்.

கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 119 பேரில் 89 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படாத அல்லது தாமதமாகத் தென்படுவது தொடர்பான சம்பவங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அறிவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அறிகுறிகள் தென்படவில்லை அல்லது தாமதமாக அறிகுறிகள் தென்பட்டன என்று தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது. சீன அரசாங்கம் வெளியிட்ட தரவுகளை அது மேற்கோள் காட்டியிருந்தது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் விமானத்தில் பயணத்தபோது நெருக்கமாக இருந்தவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அத்தகையோர் கழிவறையுடன்கூடிய ஓர் அறையில் தங்க வைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், சுற்றுப் பயணிகள் உட்பட, குறுகிய கால விசாவுடன் சிங்கப்பூருக்குள் வருவோருக்கும், சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்வோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்த வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படுகிறது.

#சிங்கப்பூர் #கொரோனா #அறிகுறி

சிங்கப்பூர்
கொவிட்-19
அறிகுறி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!