இலங்கையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்காலிக நிறுத்தம்

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை அதிகாரிகள் நேற்று எட்டு மணிநேரத்திற்கு ரத்து செய்தனர். இதனால் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை மக்கள் கடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பலர் பேரங்காடி மற்றும் கடைகளுக்கு வெளியே முகக்கவசம் அணிந்தவாறு வரிசை பிடித்து நின்றனர். நேற்று முன்தினம் முதல் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. நேற்றுக் காலை நிலவரப்படி இலங்கையில் 97 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  படம்: ஏஎஃப்பி