நோயாளியுடன் செல்ஃபி எடுத்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

கராச்சி: தடைக்காப்பு ஆணை விதிக்கப்பட்டிருந்த கொரோனா கிருமித்தொற்று நோயாளி ஒருவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஆறு அரசாங்க ஊழியர்கள், தங்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரித்த முகத்துடன் முகக்கவசங்கள் அணியாமல் அறுவரும் நோயாளியுடன் எடுத்த அப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பெரும்பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சிந்து மாநிலத்தின் சுக்குர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே லாவோசிலும் முதல் இரண்டு கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று உறுதியாகின.