செயல்முறைகளை மறுஆய்வு செய்யும் பிசிஎஃப்

பிடோக் நார்த்­தில் உள்ள ஃபெங்ஷான் பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்ளியில்  பல­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து மக்­கள்   செயல் கட்சி சமூக அற­நி­று­வனம் அதன் செயல்­மு­றை­களை மறு­ஆய்வு செய்ய இருக்­கிறது. படம்: எஸ்டி, லிம் யாஹுய்

பிடோக் நார்த்­தில் உள்ள ஃபெங்ஷான் பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்ளியில் பல­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து மக்­கள் செயல் கட்சி சமூக அற­நி­று­வனம் அதன் செயல்­மு­றை­களை மறு­ஆய்வு செய்ய இருக்­கிறது.

அந்த நிலை­யத்­தைச் சேர்ந்த மேலும் ஓர் ஆசி­ரி­ய­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் மூலம் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­தக் குழு­மத்­தில் 15 ஊழி­யர்­க­ளுக்­கும் நான்கு குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

உடல்­ந­ல­மில்­லா­மல் இருப்­ப­தாக தெரி­வித்த ஐந்து குழந்­தை­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அவர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

ஃபெங்ஷான் நிலை­யத்­தின் எஞ்­சி­யுள்ள 10 ஊழி­யர்­களும் 110 மாண­வர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மற்ற பிசி­எஃப் நிலை­யங்­க­ளைச் சேர்ந்த 30 ஊழி­யர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஃபெங்ஷான் நிலை­யத்­தின் தலை­மை­யா­சி­ரி­ய­ரு­டன் இவர்­கள் பயிற்சி ஒன்­றில் பங்­கெ­டுத்­த­னர்.

நாடெங்­கும் 360 நிலை­யங்­களை நடத்­தும் பிசி­எஃப் அதன் அன்­றாட செயல்­மு­றை­க­ளை­யும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் அதன் ஊழி­யர்­க­ளி­டம் வலி­யு­றுத்த இருக்­கிறது.

“பாலர் பள்­ளி­களில் அன்­றாட செயல்­மு­றை­க­ளுக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­கள் வலு­வாக்­கப்­படும் என்ற நம்­பிக்­கையை பாலர் பள்­ளி­களில் பயி­லும் குழந்­தை­க­ளின் பெற்­றோ­ருக்கு இது அளிக்­கும்,” என்­றார் அமைச்­சர் லீ. நேற்­றி­

லி­ருந்து நான்கு நாட்­க­ளுக்கு அனைத்து பிசி­எஃப் நிலை­யங்­களும் மூடப்­படும் என்று பாலர் பருவ மேம்­பாட்­டுக் கழ­கம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

“உடல்­ந­லம் இல்­லாத ஆசி­ரி­யர்­கள் மேலும் சில மணி நேரத்­துக்கு பணி­யைத் தொட­ரா­மல் உட­ன­டி­யாக நிலை­யத்­தை­விட்டு வெளி­யே­றி­யி­ருக்க வேண்­டும் என்று சிலர் கூற­லாம்.

“ஆனால் நடை­மு­றை­யில் இது சிர­மம். நிலை­யத்­தின் ஆசி­ரி­யர்­கள், நிர்­வா­கி­கள் ஆகி­யோர் இனி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பர். “மற்­ற­வர்­க­ளைக் குறை கூறு­வ­தற்­கான நேரம் இது­வல்ல. பெற்­றோ­ருக்கு நம்­பிக்கை அளிக்க பாலர் கல்­வித் துறைக்கு ஊக்­கு­விப்­பும் ஆத­ர­வும் கொடுப்­பதே முக்­கி­யம்,” என்­றார் அமைச்­சர் லீ.

இதற்­கி­டையே, முழு ஆரோக்­கி­யத்­து­டன் இருந்­தால் மட்­டுமே வேலைக்­குச் செல்­லு­மாறு மருத்­துவ நிபு­ணர்­கள் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

“நாளுக்கு சரா­ச­ரி­யாக 70 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­கிறது. இந்த நிலை நீடித்­தால் நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க புதிய தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யம் தேவைப்­படும். நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­யால் நிலை­மையை சமா­ளிக்க முடி­யாது,” என்று மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த டாக்­டர் லியோங் யோ நாம் தெரி­வித்­தார்.

“தற்­போது உலக நாடு­களை கொரோனா கிரு­மித்­தொற்று வாட்டி வதைக்­கிறது. 100% உடல்­ந­லம் இல்­லா­விட்­டால் வீட்­டி­லேயே இருப்­பது நன்று,” என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யின் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!