பிரதமர் லீ: கிருமி பரவல் பிரச்சினை முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம்

உலக முழு­வ­தும் கொரோனா கிருமி பிரச்­சினை முடி­வுக்கு வர பல ஆண்­டு­கள் ஆக­லாம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். சென்ற ஞாயிற்­றுக் கிழமை சிஎன்­என் தொலைக்­காட்­சியைச் சேர்ந்த ஃபரீட் ஸக்­கா­ரி­யா­வுக்கு அவர் பேட்­டி­ய­ளித்­தார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

உலக முழு­வ­தும் கொரோனா கிருமி பிரச்­சினை முடி­வுக்கு வர பல ஆண்­டு­கள் ஆக­லாம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். சென்ற ஞாயிற்­றுக் கிழமை சிஎன்­என் தொலைக்­காட்­சியைச் சேர்ந்த ஃபரீட் ஸக்­கா­ரி­யா­வுக்கு அவர் பேட்­டி­ய­ளித்­தார்.

“ஏதா­வது நடந்­தால் ஒழிய கிருமி பரவல் பிரச்­சினை பல ஆண்டுகளுக்கு நீடிக்­கும், உல­கம் நீண்ட போராட்­டத்­துக்கு தயா­ராக இருக்க வேண்­டும்,” என்று அவர் சொன்­னார். கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் வெற்றி பெற்­ற ­தாகக் கூறப்­ப­டு­வதை பிர­த­மர் லீ ஏற்க மறுத்­தார்.

கிருமி பர­வலை சிங்­கப்­பூர் கட்டுப்ப­டுத்­தி­ வைத்துள்ளது என்று பரவலாகக் கூறப்படுகிறது.

“தற்­போது வெற்றி பற்றி பேச தயக்­க­மாக உள்­ளது, கொரோனா கிருமி பர­வல் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலை­யில் இன்­ன­மும் போராட்­டத்­தின் மத்தியில் இருக்­கி­றோம்,” என்­றார் திரு லீ.

“சில மாதங்­களிலேயே கிருமி பர­வல் பிரச்­சினை ஓய்ந்துவிடாது. உல­கின் இதர பகு­தி­க­ளான இந்­தியா, தென்-கிழக்கு ஆசியா, லத்­தீன் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு ­க­ளுக்­கு ேமலும் பர­வ­லாம். ஏதா­வது நடந்­தால் ஒழிய இதை தடுத்து நிறுத்த முடி­யாது, உலகம் முழு­வ­தும் பர­வத் தொடங்­கி­ய­தால் முடி­வுக்கு வர இன்னும் பல ஆண்­டு­கள் ஆகலாம்,” என்றும் அவர் சொன்னார்.

கிருமி பர­வ­லுக்கு எதி­ராக அமெ­ரிக்கா ஆற்ற வேண்­டிய பங்கு குறித்­தும் திரு ஃபரீட் கேள்வி கேட்­டார். இதற்­குப் பதில் சொன்ன பிர­த­மர் லீ, இந்­தப் பிரச்­சி­னை­யில் அதி­பர் டோனல்ட் டிரம்ப் முன்­னிலை வகிக்க விரும்­ப­வில்லை போல தெரி­கிறது என்­றார்.

“கடந்த ஆண்­டு­களில் இத்­த­கைய நெருக்­க­டி­யான சம­யங்­களில் அமெ­ரிக்­கா­வின் தலை­மைத்­து­வத்­தால் உல­கம் பய­ன­டைந்தது. ஆனால் அமெ­ரிக்கா மற்­றொரு மன­நி­லை­யில் செயல்­பட்­டால் உலக நாடு­க­ளுக்கு அது இழப்­பாக அமை­யும். “மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான இந்­தச் சவால்­களில் அமெ­ரிக்கா தனக்­குள்ள பல வளங்­களை முறை­யாக பயன்­ப­டுத்­த­வில்லை” என்­று திரு லீ குறிப்பிட்டார்.

கிருமி பர­வல் விவ­கா­ரத்­தில் ஒன்­றை­யொன்று குற்­றம்­சாட்டி வரும் சீனா-அமெ­ரிக்கா உறவு பற்றி­யும் பிர­த­மர் கருத்துரைத்தார்.

“கிருமி பர­வ­லுக்கு எதி­ராக இரு நாடு­களும் சேர்ந்து செயல்­பட வேண்­டும். துர­திர்ஷ்­ட­மான சூழ்­நிலை நில­வு­கிறது. கிருமி பர­வ­லுக்கு முன்­பே அெமரிக்கா-சீனா உறவில் சிக்­க­ல் ஏற்பட்டது. இருந்தாலும் கிருமி பர­வ­லைச் சமா­ளிக்க வேண்டுமானால் அமெ­ரிக்கா, சீனா உட்­பட அனைத்து நாடு­களும் ஒன்றுசேர்ந்து செயல்­பட வேண்­டும்,” என்று பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!