பலியானவர்களுக்கு இத்தாலி மௌன அஞ்சலி

கொரோனா கிரு­மித் தொற்­றுக்­குப் பலி­யான 11,591 பேருக்கு இத்­தாலி நேற்று ஒரு நிமி­டம் மௌன அஞ்­சலி செலுத்­தி­யது. மேலும் தேசிய கொடி­கள் அரைக் கம்­பத்­தில் பறக்க விடப்­பட்­டன. படம்: இபிஇ-இஎஃப்இ

ரோம்: கொரோனா கிரு­மித் தொற்­றுக்­குப் பலி­யான 11,591 பேருக்கு இத்­தாலி நேற்று ஒரு நிமி­டம் மௌன அஞ்­சலி செலுத்­தி­யது. மேலும் தேசிய கொடி­கள் அரைக் கம்­பத்­தில் பறக்க விடப்­பட்­டன.

இத்­தா­லிய மக்­க­ளின் வாழ்க்­கையைப் புரட்டி போட்ட கிரு­மித் தொற்­றின் ஒரு மாதத்தை அனு­ச­ரிக்­கும் வகை­யில் இந்த அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. வாட்­டி­கன் சிட்­டி­யி­லும் கொடி­கள் அரைக்­கம்­பத்­தில் பறந்­தன. பிப்­ர­வரி மாதத்­தின் இறுதி வாக்­கில் மிலா­னில் முதல் சம்­ப­வம் கண்­ட­றி­யப்­பட்­டது.

கிரு­மித் தொற்­றால் உல­க­ள­வில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களில் மூன்­றில் ஒரு பங்கு உயி­ரி­ழப்பு இத்­தா­லி­யில் ஏற்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் மூன்று வாரங்­க­ளுக்கு முன்­னர் இத்­தா­லிய அர­சாங்­கம் நாடு முடக்­கப்­ப­டு­வ­தாக அறி­வித்­தது. ஆனால் கிரு­மிப் பர­வ­லால் 100,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இந்த முடக்­கம் ஏப்­ரல் 12ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் 1,590 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். குண­ம­டைந்­த­வர்­களில் அதி­க­பட்ச எண்­ணிக்கை இது என்பது குறிப்­பி­டத்­தக்­கது. மொத்­தம் 14,620 ேபர் குண­ம­டைந்தனர்.

இதற்­கி­டையே, இத்­தா­லி­யில் விரை­வில் நிலைமை சீர­டை­யக்­கூ­டும் என்­றா­லும் தொடர்ந்து விழிப்­பு­டன் பின்­தொ­டர்­வது அவ­சி­யம் என்­றும் உலக சுகா­தார மையத்­தின் மூத்த அதி­காரி சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!