ஐரோப்பிய நாடுகளில் குறைந்து வரும் உயிரிழப்புகள்

ஸ்பெ­யின், இத்­தாலி, பிரான்ஸ் மற்­றும் பிரிட்­டன் ஆகிய நாடு­களில் பல மில்­லி­யன்­க­ணக்­கா­ன­வர்­களை வீட்­டிற்­குள் முடக்­கிய கட்­டுப்­பாட்டு அல்­லது முடக்க நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பலன் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது. படம்: ஊடகம்

ரோம்: ஐரோப்­பா­வில் கிரு­மித் தொற்­றால் மிக மோச­மான பாதிப்­புக்­குள்­ளான நான்கு நாடு­களில் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் தின­சரி எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்பெ­யின், இத்­தாலி, பிரான்ஸ் மற்­றும் பிரிட்­டன் ஆகிய நாடு­களில் பல மில்­லி­யன்­க­ணக்­கா­ன­வர்­களை வீட்­டிற்­குள் முடக்­கிய கட்­டுப்­பாட்டு அல்­லது முடக்க நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பலன் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, முடக்க நட­வ­டிக்கை, கட்­டுப்­பா­டு­களை நீட்­டிக்­கவோ அல்­லது அவற்றை மேலும் கடு­மை­யாக்­கவோ அந்­நாட்டு தலை­வர்­களை அது தூண்­டி­யுள்­ளது.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வல் குறித்து மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்­கும் பொரு­ளா­தா­ரத்­தின் சில பகு­தி­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கு­மான எந்­த­வொரு முயற்­சி­யை­யும் அதி­கா­ரி­கள் அல­சிப் பார்க்­கக்­கூ­டும்.

உல­கம் முழு­வ­தும் 1.3 மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், உயி­ரி­ழ­ப்பவர்­க­ளின் எண்­ணிக்கை 70,000த்தை நெருங்­கு­கிறது.

இதில் ஆக அதி­க­மாக இத்­தா­லி­யில் 16,000 பேரும் ஸ்பெ­யி­னில் 12,000 பேரும் மாண்­ட­னர்.

இதற்­கி­டையே, இத்­தா­லி­யில் கடந்த மார்ச் 19ஆம் தேதிக்­குப்­பின் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை முதல்­மு­றை­யா­கக் குறைந்­துள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் 525 பேர் மாண்­ட­னர்.

ஸ்பெ­யி­னில் இந்த எண்­ணிக்கை நேற்று தொடர்ந்து நான்­கா­வது நாளா­கக் குறைந்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மைக்­குப் பிறகு பிரான்­சில் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து­உள்­ளது. இங்கு இது­வரை 8,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மாண்­ட­னர்.

பிரிட்­ட­னில் நேற்று முன்­தி­னம் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதற்கு முந்­திய நாளை­விட குறைவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!