சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட ஆக மூத்தவரான 102 வயது மூதாட்டி குணமடைந்தார்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 102 வயதான திருவாட்டி யாப் லே ஹோங், குணமடைந்து இன்று (மே 1) டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து இல்லத்துக்கு திரும்பினார். படம்: திரு ஆலன் ஹோ

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 102 வயதான திருவாட்டி யாப் லே ஹோங், குணமடைந்து இன்று (மே 1) டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து இல்லத்துக்கு திரும்பினார்.

லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் இல்லத்தில் கிருமித்தொற்று கண்ட 16 இல்லவாசிகள், ஊழியர்களுள் ஒருவர் திருவாட்டி யாப். இந்தக் கிருமித்தொற்று குழுமம் உருவானதையடுத்து, வயதானவர்கள் பராமரிக்கப்படும் தாதிமை இல்லங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடுமையாகப் போராடி கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டுத் திரும்பும் இல்லவாசிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்வதாக லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் இல்லத்தின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

“அவர்கள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து திரும்பிவிட்டனர்; தற்போது இல்லத்தில் ஓய்வு எடுக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்த நமது முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் தன்னலமற்ற முயற்சிகளுக்கு நன்றி,” என்றும் அது பதிவிட்டிருந்தது.

96 வயதான இல்லவாசி ஒருவர் இன்னும் மருத்துவமனையில் இருந்தாலும் அவரது உடல் நலம் சீராக இருப்பதாக லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் தாதிமை இல்லத்தின் நிர்வாகி தென் கிம் யுவான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

திருவாட்டி யாப், 1918ல் நிகழ்ந்த ஸ்பேனிஷ் ஃபுளூ கொள்ளைநோய் காலத்தில் பிறந்தவர். உலகின் பல பகுதிகளில் இவரைப்போல, அந்தக் காலகட்டத்தில் பிறந்த இன்னும் சிலர் ஸ்பேனிஷ் ஃபுளூ, கொவிட்-19 ஆகிய இரு கொள்ளைநோய்களைச் சந்தித்தவர்களாக இருக்கின்றனர்.

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்ட ஆக முத்தவர், நெதர்லாந்தைச் சேர்ந்த 107 வயது கொர்னிலியா ராஸ், 20 நாட்களில் கொவிட்-19லிருந்து விடுபட்டார்.

லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் தாதிமை இல்லத்தைச் சேர்ந்த 86 வயதான இருவர் கொவிட்-19க்கு பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி யாப்புக்கு 11 பேரப்பிள்ளைகள், 13 கொள்ளு பேரப்பிள்ளைகள். திருவாட்டி யாப்புக்கு ஏப்ரல் மாதம் முதல் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமது தயார் எப்போதும் நல்ல உடல் நலத்தைப் பராமரித்ததாக திருவாட்டி யாப்பின் இரண்டாவது மகன் திரு ஆலன் ஹோ குறிப்பிட்டார்.

வூஹானில் கிருமித்தொற்று ஏற்பட்டபோதே தமது தாயாரிடம் இதுபற்றி விளக்கியதாக ஓய்வு பெற்ற மேலாளரன திரு ஹோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

நடைப் பயிற்சி மேற்கொள்வது, குளியல் போன்ற தினசரி நடவடிக்கைகளை தாமாகவே மேற்கொள்ளும் திருவாட்டி யாப் முடிந்தவரை தம்முடைய பணிகளைத் தாமே செய்துகொள்வார் என்று திரு தென் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போராட்டத்தை நாம் அனைவரும் கடப்போம் என்ற நம்பிக்கையை திருவாட்டி யாப் வழங்குகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்
கொவிட்-19
102
covid-19 survivor
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!