சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் 13.5 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

உடலிலிருந்து கிருமிகள் வெளியேறும் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதில் சிங்கப்பூர் கூடுதல் முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜனவரி முதல் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவமனை அல்லது தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர்.

திங்கட்கிழமை (மே 11) நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 23,787 பேரில் 13.5 விழுக்காட்டினர் அல்லது 3,225 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 21 பேர் உயிர் இறந்துள்ளனர்.

மருத்துவமனை அல்லது தனிமைப்படுத்தும் இடங்களில் தங்கியுள்ளவர்கள் எல்லாருமே நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை. சிலர் குணமடைந்துள்ளனர். எனினும் அவர்கள் கொரோனா கிருமியைப் பரப்பக்கூடும் என்பதால் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஐந்து நோயாளிகளில் நான்கு பேருக்கு லேசாகவே நோய் பாதிப்பு உள்ளது. சுவாசக்குழாயின் மேல் பகுதியில் பாதிப்பு அறிகுறிகள் உள்ளன. ஆனால் நுரையீரல் தொற்று இல்லை என்று தேசிய தொற்று நோய் சிகிச்சை நிலையம் (என்சிஐடி) தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு வழக்கமாக ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். எனினும், அவர்களின் உடலிலிருந்து கொரோனா கிருமி வெளியேறுவது நிற்க மேலும் பதினைந்து நாட்கள் தேவைப்படலாம்.

நோயின் தொடக்க கட்டத்தில் கிருமியின் தாக்கம் கடுமையாக உள்ளது என்றும் முதல் வாரத்தில் அது மெல்லக் குறைகிறது என்றும் என்சிஐடியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் லியோ யீ சின் கூறினார்.

நோய்வாய்ப்பட்ட 26வது நாள் வாக்கில், 90 விழுக்காட்டு நோயாளிகளின் உடலிலில் இருந்து கிருமி வெளியேறுவது நின்றுவிடும் என்றார் அவர்.

உடலிலிருந்து கிருமிகள் வெளியேறும் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதில் சிங்கப்பூர் கூடுதல் முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஐந்து நோயாளிகளில் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவர்கள் குணமடைய பொதுவாக மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை ஆகின்றன.

ஏறக்குறைன 15 விழுக்காடு நோயாளிகள் நுரையீரல் பாதிப்புடன் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன் ரத்தத்தில் பிராணவாயு அளவும் குறைகிறது என்றார் பேராசிரியர் லியோ.

இருபதில் ஒரு நோயாளி மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள்: https://tmsub.sg/online

சிங்கப்பூர்
கொவிட்-19
கொரோனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!