இங்கிலாந்தில் கொவிட்-19 சிகிச்சை வழி பிரபலமான இந்திய பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 55 வயதான இவர், இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளிடையே பிரபல மருத்துவராக விளங்கி வந்தார். படம்: ஊடகம்

கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளுக்கு அயராது சிகிச்சை அளித்து மக்களிடையே பிரபலமானவர் மருத்துவர் பூர்ணிமா நாயர். இங்கிலாந்தின் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார் இவர்.

கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகின்றனர்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 55 வயதான இவர், இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளிடையே பிரபல மருத்துவராக விளங்கி வந்தார்.

கடந்த மார்ச் 20ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த பூர்ணிமாவையும் கொரோனா கிருமித்தொற்று தாக்கியது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 27ம் தேதி முதல் அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை பூர்ணிமா நாயர் உயிரிழந்தார்.

இதையடுத்து இங்கிலாந்தில் கொவிட் 19 நோய்க்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா கிருமி தாக்கிய நிலையில் பூர்ணிமா மிகுந்த மனவலிமையுடன் உயிருக்காகப் போராடி வந்ததாகவும் அது பலனின்றி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் பணியாற்றிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூர்ணிமாவுக்குத் தாயார், கணவர், ஒரு மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

பூர்ணிமா
இங்கிலாந்து
மருத்துவர்
கொரோனா
உயிரிழப்பு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!