வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் 'டிரேஸ் டுகேதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்

வெளிநாட்டு அடையாள அட்டை எண் அல்லது வேலை அனுமதி அட்டை எண்ணைக் கொண்டு ‘டிரேஸ் டுகேதர்’ செயலியில் பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 19) தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் செயலியைப் (டிரேஸ் டுகேதர்) பதிவிறக்கம் செய்து அதைச் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

கட்டுமானத் துறை, கடல்துறை உள்ளிட்ட தொழில்துறைகளில் வேலை செய்யும் எஸ்-பாஸ், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான அவசியம் குறித்து கடந்த மே 27ஆம் தேதி அமைச்சு முதலில் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, இப்போது முதலாளிகளுக்கு இதுகுறித்து அமைச்சு நினைவுபடுத்தியுள்ளது.

வெளிநாட்டு அடையாள அட்டை எண் அல்லது வேலை அனுமதி அட்டை எண்ணைக் கொண்டு ‘டிரேஸ் டுகேதர்’ செயலியில் பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.

இங்குள்ள 40 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த சுமார் 5,500 வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

சிங்கப்பூர்
வெளிநாட்டு ஊழியர்
டிரேஸ் டுகெதர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!