கொவிட்-19 உயிரிழப்புகளைக் குறைக்க ‘டெக்சமெத்தசோன்’ மருந்து பலனளிப்பதாகத் தகவல்

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலனைத் தரும் என்றும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளில், எண்மரில் ஒருவரின் உயிரை இந்த மருந்து காப்பாற்றும் என்றும் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

கொவிட்-19 நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை மூன்றில் ஒரு பங்காக குறைக்க ‘டெக்சமெத்தசோன்’ (Dexamethasone) எனும் மருந்தால் முடியும் என்பதில் சிங்கப்பூரில் தொற்றுநோய்ச் சம்பவங்களைக் கையாளும் மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வு முடிவுகள் மூலம் இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்தனர். பின்னர் அவர்களுடைய மருத்துவ நிலை, இந்த மருந்தை உட்கொள்ளாத 4,000 நோயாளிகளின் நிலையுடன் ஒப்பிடப்பட்டது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு இந்த மருந்து 10 நாட்கள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்கள் உயிரிழப்பதற்கான அபாயம் 40லிருந்து 28 விழுக்காடாக குறைந்தது.

‘டெக்சமெத்தசோன்’ மருந்தை நோயாளிகளுக்கு சோதித்துப் பார்த்த ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் பீட்டர் ஹோர்பி பிபிசி ஊடக நிறுவனத்திடம் கூறுகையில், “இதுவரையில், உயிரிழப்பு விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரே மருந்து இதுவே. இது ஒரு பெரிய முன்னேற்றம்,” என்றார்.

குறிப்பாக, கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலனைத் தரும் என்று அக்குழு தெரிவித்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளில், எண்மரில் ஒருவரின் உயிரை இந்த மருந்து காப்பாற்றும் என்று அக்குழு சொன்னது.

பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஹோர்பி கூறினார். எனினும், சுவாசப் பிரச்சினை இல்லாத நோயாளிகளுக்கு இந்த மருந்து அவ்வளவாக உதவாது என்றார் அவர்.

இந்நிலையில், இந்த மருந்தின் பயன்பாடு குறித்த முழு ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகே எதையும் தீர்மானிக்க முடியும் என இங்குள்ள நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் கொவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலனைத் தருவதற்கான சாத்தியம் இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதார பள்ளியைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரான இணைப் பேராசிரியர் சூ லியாங் கருத்துரைத்தார்.

இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்சமெத்தசோன் மருந்தைத் தயாரிப்பதால் அங்கு ரூ.10 விலையில், 10 மில்லிகிராம் அளவிலான மருந்து கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

சிங்கப்பூர்
Dexamethasone
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!