சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டோர் சென்ற மேலும் 12 இடங்கள்

313 @ சாமர்செட், விவோசிட்டி, பூகிஸ் ஜங்ஷன் போன்ற புதிய இடங்கள் உட்பட 12 இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தை சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 25) வெளியிட்டது.

313 @ சாமர்செட், விவோசிட்டி, பூகிஸ் ஜங்ஷன் போன்ற புதிய இடங்கள் உட்பட 12 இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன.

குறிப்பிட்ட அந்த நேரங்களில் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலத்தை அணுக்கமாகக் கவனித்து, தேவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த நிறுவனங்களுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்.

கீழ்க்கண்ட அட்டவணையில் முழு விவரங்கள்:

(இந்த அட்டவணையில் குடியிருப்புப் பகுதிகள், வேலையிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பொதுப் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

தேதி நேரம் இடம்
11 ஜூன் 1730 மணி முதல் 1800 மணி வரை 86 சையது ஆல்வி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ முருகன் டிரேடிங்
14 ஜூன் 1730 மணி முதல் 1800 மணி வரை தி நியூ வோர்ல்ட் சென்டரில் இருக்கும் செங் சியோங் பேரங்காடி
14 ஜூன் 2000 மணி முதல் 2100 மணி வரை 803 கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் இருக்கும் பிரைம் பேரங்காடி
15 ஜூன் 1825 மணி முதல் to 2055 மணி வரை ஃபேர்பிரைஸ் பேரங்காடி ((447A ஜாலான் காயு)
19 ஜூன் 1715 மணி முதல் to 1805 மணி வரை ஷெங் சியோங் பேரங்காடி (19 சிராங்கூன் நார்த் அவென்யூ 5)
21 ஜூன் 1645 மணி முதல் 1815 மணி வரை குவீன்ஸ் வே ஷாப்பிங் சென்டர் (1 குவீன்ஸ்வே)
21 ஜூன் 1900 மணி முதல் 2000 மணி வரை சியா ஐஎம் உணவு நிலையம் (2 Seah Im Road)
21 ஜூன் 2015 மணி முதல் 2115 மணி வரை விவோசிட்டி
22 ஜூன் 1430 மணி முதல் 1500 மணி வரை ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் லக்கி பிளாசா
22 ஜூன் 1525 மணி முதல் 1730 மணி வரை ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் 313@சாமர்செட்
22 ஜூன் 1740 மணி முதல் 1815 மணி வரை பெனின்சுலா ஷாப்பிங் சென்டர் (3 கோல்மேன் ஸ்திரீட்)
22 ஜூன் 1835 மணி முதல் 1935 மணி வரை காலாங் வேவ் மால்
23 ஜூன் 1310 மணி முதல் 1430 மணி வரை பூகிஸ் ஜங்ஷன் (சிங்டெல்)

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

சிங்கப்பூர்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!