புதிய வழக்கநிலையில் சுய பாதுகாப்பு

கிருமிப் பரவல் முறியடிப்பு கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்டு, வெளியில் செல்லத் தொடங்கிவிட்டோம். முன்பைவிட இப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும்.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை பல நாட்களுக்குப் பின்னர் சந்திக்கவும் பிடித்த இடங்களுக்குச் செல்லவும் முடிவது உங்களுக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால் இப்போதுதான் நீங்கள் சுகாதாரத்தைப் பேணி, மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியம். உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியையும் நீங்கள் அதிகரிக்க வேண்டு்ம்.

கொவிட்-19 கிருமிப் பரவலில் இருந்து பாதுகாக்க சவர்க்காரம் போட்டு கைகளை அடிக்கடி கழுவுவது, முகக்கவசம் அணிவது, மற்றவர்களிடம் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை மேற்கொள்வது இப்போது உங்கள் வாழ்க்கை முறையாகி இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது ஆன்டிபக்டீரியா ஈரத்தாட்கள், கிருமிநாசினி போன்றவற்றை உடன் எடுத்துச்செல்ல மறவாதீர்கள்.

நோயெதிர்ப்பு சக்தி பலப்பட

உடல் நோய்­களை எதிர்த்து, ஆரோக்­கி­யமும் வலி­மை­யும்­பெற ஊட்­டப்­பொருட்­கள் அனைத்­தை­யும் வழங்­கும் சமச்­சீர் சத்துள்ள உணவு முறை அவ­சி­யம். உயிர்ச்சத்துகள் ஏ, சி, ஈ, தாதுப் பொருட்கள் கொண்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், மீனுணவு போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

ஆன்­டி­ஆக்­சி­டன்ட் அதிக­முள்ள பழங்­கள்,

காய்­க­றி­க­ள், ஒமேகா-3 கொழுப்பு அமி­லம் அதி­க­முள்ள சால்­மன் போன்ற மீன்­களை உண்­ணுங்­கள்.

தூக்கமின்மை உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டைக் குறைக்கும். நல்ல தூக்கம் நோயெதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் என ஜெர்மனியின் டூபிங்கன் பல்கலைக்கழக ஆய்வு காட்டுகிறது. நல்ல தூக்கம் சளி போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

தூக்­கத்­தின் தர­மும் முக்­கி­யம். இரவில் தூங்கச் செல்­வ­தற்­கு ஒரு மணி நேரத்­திற்கு முன்­ கைப்­பே­சி­யை அடைத்து வைப்பதால், நீல ஒளி பாதிப்­பைக் குறைக்கலாம். வெது­வெதுப்­பான நீரில் குளிப்பது, புத்தகங்கள் வாசிப்பது போன்ற பழக்கங்களுடன் அயர்ந்து தூங்­குங்­கள். முக்­கி­ய­மாக, மெத்­தை­, தலை­ய­ணை­கள் தூங்­கும் உடற்­பாங்­கிற்கு ஏற்றதாக இருப்பதை உறு­திப்­ப­டுத்­துங்­கள்.

வழக்கமான உடல் பரிசோதனை களைத் தவறாமல் செய்வதன் மூலம் முன்கூட்டியே நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து நோய்வராமல் தடுக்கலாம், நோயை ஆரம்பத்திலேயே குணப் படுத்தலாம். அத்துடன், டைஃபாயிட், ஹெபடிடிஸ் ஏ, பி போன்றவற்றுக்கு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் வழி மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தலாம்.

SATA CommHealth Medical Centre-இல் முழு உடல்நல பரிசோதனைகள் தடுப்பூசிகள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. பதிவுக்கும் விவரங்களுக்கும் தொடர்புகொள்ள தொலைபேசி எண்- 6244 6688, இணையத்தளம்: www.sata.com.sg

உடலுக்கு அசைவு

தொடர்ச்சியான உடற்பயிற்சி, நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

உடற்பயிற்சிக் கூடத்துக்கு உடற்பயிற்சி செய்யப்போகும் போது:

 உபகரணங்களை கிருமிநாசியால் துடையுங்கள்.

 இருக்கைகள் மீது துண்டைப் போட்டு அமருங்கள்.

 பாதுகாப்பான இடை வெளியைப் பின்பற்றுங்கள். மற்ற உடற்பயிற்சியாளர்களுடன்

2 மீட்டர் தூரம் தள்ளி இருங்கள். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது 3 மீட்டர் தள்ளி இருங்கள்.

 முடிந்தவரை உச்சநேரத்தைத் தவிருங்கள்.

 எப்போதும் போதிய நீர்ச்சத்து உடம்பில் இருக்க தண்ணீர் குடியுங்கள், உடல் வெப்பநிலையைச் சோதியுங்கள்.

உங்கள் குழந்தைகள் பலம்பெற உதவுங்கள்

உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி இப்போதுதான் வளர்ந்து வருகிறது என்பதால், சளி, மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராட அவர்களது நோயெதிர்ப்பு அமைப்பு பலமாக இருக்காது. இதனால்தான் காசநோய், ஹெபடிடிஸ் பி, போலியோ கிருமி போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க நோய்த்தடுப்பு மருந்துகள் அவசியம். வருடாந்திர காய்ச்சல் தடுப்பு மருந்து சளியிலிருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, ஈ நிறைந்த கீரை, முட்டை, பருப்பு வகைகள் போன்ற உணவுகளுடன் சமச்­சீர் சத்துள்ள உணவு குழந்தைக்கு வலுவான நோயெதிர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவுடன் Sambucol Kids Immunity Gummies கொடுக்கலாம். $26.90 விலையில் கிடைக்கும் இதில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு செயல்பாட்டுக்கு உதவும் கறுப்பு எல்டர்பெர்ரி, வைட்டமின் சி, துத்தநாதம் உள்ளது. அல்லது நோயெதிர்ப்பு திறனை வலுப்படுத்தி, செரிமானத்தையும் ஊக்குவிக்கும் KinderNurture KinderBiotics கொடுக்கலாம்.

விலை- $41.30. VitaKids கடைகளில் கிடைக்கும்.

சுத்தமாக இருங்கள், உடல்நலத்துடன் இருங்கள்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் அதேநேரத்தில், கிருமிகள் தங்காமல் உங்கள் சுற்றுப்புறத்தையும் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். மீண்டும் பயன்படுத்தும் முகக்கவசத்தை பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் Attack Ultra Power துணி துவைக்கும் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்தி நன்கு தேய்த்து, வெது வெதுப்பான நீரில் 20 விநாடிகள் கழுவி காயவையுங்கள்.

Attack Ultra Power துணியில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும். பிரதான பேரங்காடிகள், கடைகள், இணையக் கடைகளில் $12.80க்கு கிடைக்கும்.

அன்றாடம் வீட்டைச் சுத்தம் செய்ய அழுக்கைப் போக்குவதுடன் கிருமிகளையும் அழிக்கும் பொருட்களைப் பயன்படுத்துங்கள். தரையைச் சுத்தப்படுத்தும் Magiclean, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் கொவிட்-19 கிருமியை அழிக்க வீட்டு சுத்திகரிப்புப் பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது தூசு, அழுக்கு, பிசுபிசுப்பை தரையிலிருந்து நீக்கும். பிரதான பேரங்காடிகள், கடைகள், இணையக் கடைகளில் $5.95க்கு கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!