சிங்கப்பூரில் புதிதாக நால்வருக்கு கொரோனா தொற்று

இன்றுடன் கடந்த 9 நாட்களாக உள்ளூரில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 19) நண்பகல் வாக்கில் புதிதாக 4 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

இன்றுடன் கடந்த 9 நாட்களாக உள்ளூரில் யாருக்கும் தொற்று இல்லை. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகத்தில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. அதேபோல வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியிலும் யாரையும் கிருமி தொற்றவில்லை.

புதிதாக கிருமி தொற்றிய 4 பேரையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 58,139 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

புதன்கிழமையன்று புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் 5 பேர். அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருந்தது.

புதன்கிழமை இங்கு தொற்றுடன் வந்தவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

புதன்கிழமை சமூகத்தொற்று யாருக்கும் இல்லை. அதேபோல வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியிலும் யாரையும் கிருமி தொற்றவில்லை. புதன்கிழமையன்று ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 58,031 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

புதிதாக கிருமித்தொற்றுக் குழுமம் பற்றி புதன்கிழமை அமைச்சு தெரிவிக்கவில்லை. கொவிட்-19 நோயாளிகள் சென்று வந்ததாகத் தெரிவித்து புதிய இடங்கள் எதையும் அமைச்சு குறிப்பிடவில்லை.

ஆஸ்பிரி-வெஸ்ட்லைட் பாபன் என்ற விடுதியில் ஏற்பட்டு இருந்த கிருமித்தொற்று ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அங்கு கடந்த 28 நாட்களில் யாருக்கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.

நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 33 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். யாரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இல்லை. சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் 28 பேர் குணமடைந்து வருகிறார்கள்.
கொவிட்-19 காரணமாக 28 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். கொரோனா கிருமித்தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கிறது.

கொவிட்-19
சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!