கொவிட்-19: ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கும் உலக நாடுகள்

‘ஃபைஸர்’, ‘மொடர்னா’ ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்தைவிட ஆஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்தைப் பெற உலக நாடுகள் ஆர்வம் காட்டுவதற்குப் பல காரணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் ‘ஃபைஸர்’, ‘மொடர்னா’ ஆகிய நிறுவனங்கள் நம்பிக்கையளிக்கும் முடிவுகளைத் தந்துள்ளன. எனினும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளைத் தவிர்த்து உலகின்

பெரும்பகுதி கொவிட்-19 நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தடுப்பூசி உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனத்தின் இறுதி முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறது.

ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பூசி, வளர்ந்து வரும் நாடுகளின் தடுப்பூசி தேவையின் 40 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஃபைஸர்’, ‘மொடர்னா’ ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்தைவிட ஆஸ்ட்ரா செனகாவின் தடுப்பு மருந்தைப் பெற உலக நாடுகள் ஆர்வம் காட்டுவதற்குப் பல காரணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிடும்படியாக, ‘ஃபைஸர்’ தடுப்பு மருந்தைவிட ஆஸ்ட்ராவின் தடுப்பு மருந்தின் விலை கட்டுப்படியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியா முதல் பிரேசில் வரை பல நாடுகளில் ஆஸ்ட்ரா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான சாத்தியமும் நிலவுகிறது. மேலும், ஃபைஸர் தடுப்பூசிகள் பூஜ்ஜியத்திற்குக் கீழ் 75 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஆஸ்ட்ரா மருந்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

என்றாலும், கொவிட்-19 தொற்றைத் தடுப்பதில் ‘ஃபைஸர்’, ‘மொடர்னா’ தடுப்பூசிகளுக்கு இருக்கக்கூடிய திறன் ஆஸ்ட்ராவிற்கு இல்லையெனில், ஆஸ்ட்ரா தடுப்பு மருந்தைச் சார்ந்திருக்கும் பல நாடுகளில் நோய்த்தொற்று முடிவுக்கு வராத நிலை ஏற்படும் ஆபத்து நிலவுவதாக கூறப்படுகிறது.

கொவிட்-19
தடுப்பூசி
தடுப்பு மருந்து
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!