அமைச்சர்: தடுப்பூசி விநியோகத்தில் சிங்கப்பூர் உதவ முடியும்

ஏ*ஸ்டார் எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்துக்கு இன்று மேற்கொண்ட வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சான் பேசினார். படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பிரதான மருந்தாக்க நிறுவனங்களுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பில் அந்தத் தடுப்பூசிகளை இந்த வட்டாரத்தில் விநியோகிப்பதில் சிங்கப்பூர் பங்களிக்க முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி தயாரிப்பில் சிங்கப்பூர் பங்களிக்காமல் இருந்திருக்கலாம்,” என்ற திரு சான், “அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், தடுப்பூசி தயாரிப்பிலும் அதன் விநியோகத்திலும் சிங்கப்பூரின் உத்தேச பங்களிப்பை எதிர்பார்க்கலாமா,” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

“தடுப்பூசி தயாரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடந்துகொண்டிருக்கும் வேளையில், அந்தத் தயாரிப்புத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணியான விநியோகத்தில் சிங்கப்பூர் உதவ முடியும்.

அந்தத் தயாரிப்புப் பணியில் பொட்டலம் போடுவதிலும் சிங்கப்பூர் பங்களிக்க முடியும். அந்தப் பணியை சிங்கப்பூரிலிருந்தபடியே செய்ய முடியும். அதன் பிறகு தடுப்பூசிகளை இந்த வட்டார நாடுகளுக்கு விநியோக்கும் பணியை மேற்கொள்ள முடியும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

சிங்கப்பூர்
கொவிட்-19 தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!