இந்தியாவில் கொரோனா எட்டிப் பார்க்காத கிராமம்

பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் கேவி என்னும் குக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை. படம்: இணைய்ம

இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் கேவி என்னும் குக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை.

அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ள இங்கு சுமார் 1,000 பேர் வசிக்கிறார்கள். அவர்களில் 163 பேர் பழங்குடியி னர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழர்கள்.

இந்த கிராமம் குறித்து அருகே உள்ள சீதாதோடு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர் ஜே. வின்சென்ட் சேவியர் கூறுகையில், “இங்கிருக்கும் மக்கள் அனைவருமே கிருமிப் பரவல் தடுப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள். மேலும் இவர்கள் நகரப் பகுதிக்குச் செல்வதில்லை,” என்றார்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திரகுமார் கூறுகையில், "நாட்டிலோ மாநிலத்திலோ தற்போதைய கொரோனா பெருந்தொற்று பற்றி எங்களது கிராம மக்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு தொலைக்காட்சி இல்லை. இங்கு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாததால் எங்கள் கிராம மக்களிடம் கைபேசியும் கிடையாது. சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் எங்களுக்கு கொரோனா பற்றி எடுத்துக்கூறி வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினர். நாங்களும் அதனை சரியாகப் பின்பற்றுகிறோம்," என்கிறார்.

கேரளா
கிருமித்தொற்று
பத்தனம்திட்டா
இந்தியா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!