சென்னையில் விமானச் சேவை குறைந்தது
11 May 2021 22:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2021 22:45
தமிழக அரசு, இம்மாதம் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள வேளையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (மே 11) உள்நாட்டு விமானச் சேவைகள் குறைந்தன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் 62, சென்னைக்கு வரும் விமானங்கள் 64.
சென்னை
விமான நிலையம்
விமானம்
தமிழகம்