'வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் எல்லையை மூடியிருந்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்'

கடந்த ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்திற்குப் பிறகு இதுவரை எத்தனை வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்து உள்ளனர் என்ற விவரத்தை அமைச்சு வெளியிடவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்திற்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களைச் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்காமல் இருந்திருந்தால் குறைந்தது 100,000 ஊழியர்கள் மற்றும் 30,000 பணிப்பெண்கள் பற்றாக்குறையால் சிங்கப்பூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூரின் மொத்த வெளிநாட்டு ஊழியரணியில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் 984,100 வெளிநாட்டு ஊழியர்களும் 247,400 வெளிநாட்டுப் பணிப்பெண்களும் வேலை செய்து வந்தனர்.

சிங்கப்பூர் சென்ற ஆண்டு தனது எல்லைகளை மூடியிருந்தால் சுகாதாரப் பராமரிப்பு, துப்புரவு போன்ற அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட 70,000 சேவைத் துறை ஊழியர்கள், 30,000 கட்டுமான ஊழியர்கள், 30,000 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டிருக்கலாம்.

வெளிநாட்டில் இருந்து வரும் கொரோனா பாதிப்புகளைத் தடுக்க சிங்கப்பூர் தனது எல்லைகளை முழுவதுமாக மூட வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து குரல்கள் எழுந்ததை அடுத்து, அமைச்சு விளக்கமளித்துள்ளது.

“தொழில்துறைகளிலும் குடும்பங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்,” என்று அமைச்சு தெரிவித்தது.

இம்மாதம் 2ஆம் தேதியில் இருந்து தெற்காசியாவில் இருந்து அனைத்து வருகைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

“அதே வேளையில், மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண அதிகமான ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதியளிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன,” என்று அமைச்சு கூறியது.

இதனிடையே, கட்டுமானம் மற்றும் கட்டடச் சூழல் துறைகளின் முக்கியப் பிரதிநிதிகள், பாதுகாப்பான, கட்டுப்பாடான முறையில் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று நேற்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டில் இங்கு வந்த வெளிநாட்டு ஊழியர்களை விட, இங்கிருந்து வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் தங்களது ஒப்பந்த காலம் முடிந்ததும் ஊழியர்களில் பலரும் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்கின்றனர் என்றும் அமைச்சு இன்று தெரிவித்தது.

வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் கொரோனா தொற்றும் அபாயத்தைக் குறைப்பதற்காக எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு ஈடாகப் போதிய அளவில் வேறு ஊழியர்களைப் பணியமர்த்த இயலவில்லை.

கடந்த ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்திற்குப் பிறகு இதுவரை எத்தனை வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்து உள்ளனர் என்ற விவரத்தை அமைச்சு வெளியிடவில்லை.

ஆயினும், சென்ற ஆண்டு மார்ச்சில் இருந்து இவ்வாண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் கட்டுமானம், கடல், பதனீடு, சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5,600 வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களும் எஸ்-பாஸ் ஊழியர்களும் வெளியேறிவிட்டதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மனிதவளப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சராசரியாக ஒரு மாதத்திற்கு 5,100 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டில் கட்டுமானம், கடல், பதனீடு ஆகிய துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 16% குறைந்தது. அதாவது, 370,100ல் இருந்து 311,000ஆகக் குறைந்தது.

இதனிடையே, 2020 மார்ச்சில் இருந்து இவ்வாண்டு மார்ச் வரை சேவைத் துறை 42,000 ஊழியர்களை இழந்துவிட்டதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

கட்டுமானம்
வெளிநாட்டு ஊழியர்
மனிதவள அமைச்சு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!