கொவிட்-19 விதிமீறலைக் கண்டுபிடிக்க தீவிர சோதனை; லிட்டில் இந்தியாவில் நடவடிக்கை, அபராதம்

ஜூன் 27ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் முகக்கவசத்தை அணியுமாறு வாடிக்கையாளரிடம் நினைவுபடுத்திய அமலாக்க அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 விதிமுறைகள் அண்­மை­யில் தளர்த்­தப்­பட்ட பின்­னர் உண­வ­கங்­களில் இரு­வ­ராக உண்­ணும் அனு­மதி கிடைத்­து அது நடப்பில் உள்ளது.

தீவின் வெவ்­வேறு பகு­தி­களில் மீண்­டும் வாடிக்­கை­யா­ளர்­களை உண­வ­கங்­கள் வர­வேற்­று வரும் அதே­வேளை, சமூக இடை­வெளி, பாது­காப்பு நிர்வாக நடை­மு­றை­களை அனை­வ­ரும் கடைப்­பி­டிக்­கி­றார்­களா என்­ப­தற்­கான சோத­னை­களும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த ஞாயி­றன்று (ஜூன் 27) லிட்­டில் இந்­தி­யா­வில் அது­போன்ற சோதனை நடத்­தப்­பட்­டது. சோத­னை­யில் ஈடு­பட்ட சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழக அம­லாக்க அதி­கா­ரி­களை இரண்டு மணி நேர­மாக பின்­தொ­டர்ந்­தது தமிழ் முரசு செய்­திக்­குழு.

சமூக இடை­வெளித் தூதர்­கள் கொவிட்-19 கட்­டுப்­பாட்டு நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­மாறு ஆலோ­சனை மட்­டுமே கூற­மு­டி­யும். ஆனால், விதி­களை மீறு­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கும் அதி­கா­ரம் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு உண்டு.

ஒவ்­வோர் இட­மா­கச் சென்ற அதி­கா­ரி­கள் கேம்­பல் லேன் பகுதியில் முகக்­க­வ­சத்தை மூக்­கின் கீழ் அணிந்­தி­ருந்த இளை­யர் ஒரு­வ­ருக்கு அப­ரா­தம் விதித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து சிராங்­கூன் சாலை­யில் அமைந்­துள்ள கடை­க­ளி­லும் உண­வ­கங்­க­ளி­லும் தீடீர் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில் உண­வ­கங்­களில் சாப்­பாட்­டுக்குக் காத்­தி­ருக்­கும் நேரத்­தில் முகக்­க­வ­சம் அணி­யு­மாறு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அம­லாக்க அதி­கா­ரி­கள் நினை­வூட்­டி­னர்.

ஓர் உண­வ­கத்­தின் சமை­யல் அறை­யில் முகக்­க­வ­சம் அணி­யாத குற்­றத்­திற்­காக ஊழி­யர் ஒரு­வ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அதே உண­வ­கத்­தில் ஒரு மீட்­டர் சமூக இடை­வெ­ளியை பின்­பற்­றா­மல் வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வ­கத்­தி­னுள் நுழைய வரிசையில் நின்­ற­னர்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு கொடுத்த தக­வல்­படி, இவ்­வாண்டு ஜன­வரி முதல் மார்ச் மாதம் வரை­யில், சமூக இடை­வெளி, பாது­காப்பு விதி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றிய 600 தனி­ந­பர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அவர்­களில் 350க்கும் மேற்­பட்­ட­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­யா­த­தற்­கா­கத் தண்­டிக்­கப்­பட்­ட­வர்­கள்.

கடந்த வாரத்­தின் நில­வ­ரப்­படி, கொவிட்-19 விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­த­தால் 16 உணவு, பானக் கடை­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

சிராங்­கூன் சாலை­யி­லுள்ள கோமள விலாஸ் உண­வ­க­மும் அந்­தப் பட்­டி­ய­லில் அடங்­கும்.

இந்­நி­லை­யில், கோமள விலாஸ் உண­வகத்தின் இயக்­கு­நர் திரு ராஜ­கு­மார் குண­சே­க­ரன், 35, தமிழ் முர­சி­டம் பேசி­னார்.

“நட­வ­டிக்கை கார­ண­மாக கடை­யி­னுள் அமர்ந்து உண்­ணு­வது கோமள விலாஸ் உண­வ­கத்­தில் தற்­கா­லி­கமாக நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ளது.

“நேரில் வந்து வாங்­கிச் செல்­வோ­ருக்­கும் விநியோகம் செய்யு மாறு ‘ஆர்­டர்’ தருவோ­ருக்­கும் தொடர்ந்து சேவை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. வரும் வெள்­ளிக்­கி­ழமை (ஜூலை 9) முதல் உண­வ­கம் வழக்­கம்­போல இயங்­கும்.

“இந்த சிர­ம­மான கால­கட்­டத்­தில் கொவிட்-19 விதி­மு­றை­களை கடைப்­பி­டித்து வாடிக்­கை­யா­ளர்­கள் உத­வ­வேண்­டும். எங்­க­ளது ஊழி­யர்­களும் விதி­க­ளைச் சரிவ­ரப் பின்­பற்­று­வார்­கள்.

“வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லா­னோர் விதி­க­ளுக்­குக் கட்­டுப்­பட்­டா­லும் அலட்­சி­யம் செய்­வோ­ரும் சிலர் உள்­ள­னர். இருப்­பி­னும் விதி­க­ளைப் பின்­பற்­று­மாறு வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றோம்,” என்று அவர் கூறி­னார்.

லிட்டில் இந்தியா
கோமள விலாஸ்
உணவகம்
முகக்கவசம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!