ஊழியருக்கு கொவிட்-19 தொற்று; பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் கடை மூடல்

பிஎச்ஜி கடையின் முகப்புப் பகுதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் உள்ள பிஎச்ஜி பகுதிவாரிக் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகளுக்காக அக்கடை நேற்று (ஆகஸ்ட் 24) மூடப்பட்டது.

தனது கடை மூடப்படுவதாக அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்த பிஎச்ஜி, முந்தைய நாளன்று தனது ஊழியர்களில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாகக் கூறியது.

“அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஊழியர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சளி/எச்சில் பரிசோதனைக்குச் செல்லும்படி நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்,” என்று பிஎச்ஜி மேலும் கூறியது.

அக்கடை நாளை (ஆகஸ்ட் 26) மீண்டும் திறக்கப்படும் என்று அது சொன்னது.

பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியுடன் தொடர்புடைய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு நேற்று (ஆகஸ்ட் 25) அறிவித்திருந்தது.

அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தேவையான துப்புரவுப் பணிகளை பூகிஸ் ஜங்ஷன் மேற்கொண்டு வருவதாக அக்கடைத்தொகுதியின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

அக்கடைத்தொகுதியில் ‘யக்குன் காயா டோஸ்ட்’ ரொட்டிக் கடையில் பணியாற்றும் கூங் வெய் ஹியோங் எனும் ஊழியர் ஒருவர், “இரு வாரங்களுக்கு ஒருமுறை நாங்கள் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்குச் செல்கிறோம். எனவே, நிலவரம் பற்றி எங்களுக்குப் பெரிதாக பதற்றம் எதுவும் ஏற்படவில்லை,” என்று கூறினார்.

“இன்று (புதன்கிழமை) கடைத்தொகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. கிருமித்தொற்றுக் குழுமம் உருவெடுத்துள்ளது பற்றி செய்தி அறிந்து அவர்கள் இங்கு வர அஞ்சக்கூடும்,” என்றார் அவர்.

பூகிஸ் ஜங்ஷன்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!