வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியா செல்ல அனுமதி: கடைக்காரர்களுக்கு நற்செய்தி

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக லிட்டில் இந்தியாவில் செயல்படும் கடைக்காரர்களின் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19க்கு முந்தைய சூழலில் வாரயிறுதிகளில் லிட்டில் இந்தியாவுக்குப் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தங்குவிடுதிகளில் அடைபட்டுக் கிடப்பதே அதற்குக் காரணம்.

இந்நிலையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் 500 பேர் வரை வாராவாரம் லிட்டில் இந்தியாவுக்கு வந்து செல்ல அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது கடைக்காரர்களுக்கு நற்செய்தியாக அமைகிறது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மனிதவள அமைச்சுடன் இணைந்து லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமை சங்கம் (லிஷா) பணியாற்றி வருவதாக அச்சங்கத்தின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி பார்த்தசாரதி கூறினார்.

ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இரு வாரங்களுக்கு முன்பு மனிதவள அமைச்சுடன் லிஷா சந்திப்பு ஒன்றை நடத்தியது. கடந்த சனிக்கிழமை, அமைச்சின் அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து அங்கூலியா பள்ளிவாசல், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் லிட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் சென்று ஊழியர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து லிஷா கலந்தாலோசனை நடத்தியது.

வெளிநாட்டு ஊழியர்
லிட்டில் இந்தியா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!