ஓட்டுநர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து பேச்சுவார்த்தை

பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.

பேருந்து ஓட்டுநர்களில் பலர், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கிருமி பெரிய அளவில் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்மையில் எட்டுப் பேருந்து நிலையங்களுடன் தொடர்புள்ள கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டன. அதனையடுத்து, முன்களப் பணியாளர்களான பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று திரு யோங் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய தொற்றுக்குழுமமாக தோ பாயோ பேருந்து நிலையம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அக்குழுமத்தில் திங்கட்கிழமை வரை 254 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாகக் குணமடைந்து இந்த வாரம் மீண்டும் பணிக்குத் திரும்பிய பேருந்து ஓட்டுநர்கள் சிலரை திரு யோங் சந்தித்துப் பேசியதாகவும், இப்போது பேருந்து நிலையங்களில் இருந்துவந்த மனிதவளப் பற்றாக்குறை சற்று மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டால் நிச்சயம் பேருந்து நிலையங்களில் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக பணியைத் தொடர்வர்.

முத்தரப்புகளின் கூட்டு முயற்சியால் பணியிடங்களில் வழக்கமான தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றுப் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தி தொற்று பலருக்கும் பரவாமல் தடுக்கலாம் என்று திரு யோங் அறிவுறுத்தினார்.

பேருந்து ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியபோது, தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கு முன்னர், சிலர் தங்களுக்கு இலேசான அறிகுறியிருந்ததாகவும் சிலர் எவ்வித அறிகுறியுமே இல்லையெனவும் தெரிவித்ததாக திரு யோங் கூறினார்.

பேருந்து நிலையங்கள் தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பயணிகள், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

தொற்றுப் பரவலால் ‘கோ-அஹெட் சிங்கப்பூர்’ பேருந்து நிறுவனம் செப்டம்பர் 15ஆம் தேதி, தனது ஐந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தாலும், பயணிகள் இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஓட்டுநர்களின் சேவையைப் பாராட்டத் தவறவில்லை என்று ஓட்டுநர்கள் சிலர் தம்மிடம் கூறியதாக திரு யோங் தெரிவித்தார்.

மேலும், முன்களப் பணியாளர்களான பேருந்து ஓட்டுநர்களுக்குப் பொதுமக்களின் ஆதரவு மிகவும் முக்கியம். தொற்றுநோய்க்கு எதிராகப் போராடிவரும் சவால்மிக்க இந்தக் காலக்கட்டத்தில், சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு பொறுமைகாக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பேருந்து ஓட்டுநர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!