செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டே அதிபர் பைடன் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அதிபர் ஜோ பைடன். படம்: இபிஏ

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) வெள்ளை மாளிகையில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

“பூஸ்டர் தடுப்பூசிகள் முக்கியம். ஆனால் அதைவிட என்ன முக்கியம் என்றால் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கூடுதலானோர் அதைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்,” என்று கூறிய அவர், அமெரிக்காவில் ஏறக்குறைய 23 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததைச் சுட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு பைடன், 78, தம் மனைவியும் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று தெரிவித்தார்.

உள்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு மற்ற நாடுகளுக்குக் கூடுதல் தடுப்பூசிகளை அமெரிக்கா விநியோகிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கும் திரு பைடன் பதிலளித்தார்.

“நாங்கள் ஏற்கெனவே உதவி செய்து வருகிறோம். சொல்லப்போனால், மற்ற நாடுகளைவிட நாங்கள் அதிகமாகவே செய்கிறோம்,” என்றார் அவர்.

Remote video URL
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர்
பூஸ்டர் தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!