வீட்டில் தங்கும் உத்தரவு: நிரந்தரவாசிமீது குற்றச்சாட்டு

சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியபின் உறுதிமொழிப் படிவத்தில் பொய்யுரைத்ததாக தைவானிய ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு ஜூலை 14ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்த நிரந்தரவாசி ஒருவர், வீட்டில் தங்கும் உத்தரவை ஹோட்டலில் கழிக்காமல் தமது வீட்டிலேயே கழிக்கும் நோக்கில் உறுதிமொழிப் படிவத்தில் பொய்யுரைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


லூ யி யின், 48, என்ற தைவானிய ஆடவர், தமது வீட்டில் தம்மைத் தவிர யாரும் இல்லை அல்லது தம்மைப் போலவே பயணம் மேற்கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தங்கும் உத்தரவைக் கழிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.


அதனைத் தொடர்ந்து, ஜூலை 14 முதல் 28 வரை அவர் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.


மறுநாள் அமலாக்க அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, அவரைப் போலவே பயணம் செய்திராத குடும்ப உறுப்பினர்கள் இருவர் அவ்வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து, தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் இன்று வெள்ளிக்கிழமை லூமீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.


சென்ற ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாளில் இருந்து, பிரத்தியேக இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களில் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுவோர், அந்த நாள்கள் முழுவதும் ஒரு மின்னணுக் கண்காணிப்புக் கருவியை அணிந்திருக்க வேண்டும்.


லூவிற்கான பிணைத்தொகை 5,000 வெள்ளியாக அறிவிக்கப்பட்டது. அவர்மீதான வழக்கு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் பொய்யுரைத்த குற்றத்திற்கு, முதல்முறை குற்றம் புரிவோர்க்கு ஆறு மாதம்வரை சிறையும் $10,000 வரை தண்டமும் விதிக்கப்படும்.


மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் ஓராண்டுவரை சிறையும் $20,000 வரை தண்டமும் விதிக்கப்படும்.

கொவிட்-19
வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!