பிரிட்டனில் கொவிட்-19 தொற்றும் மரணமும் மீண்டும் ஏறுமுகம் கண்டு வருகிறது.
“மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் மரண விகிதமும் அதிகரித்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம்,” என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பேச்சாளர் மேக்ஸ் பிளேன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரிட்டனில் கடந்த ஆறு வாரங்களாக ஒவ்வொரு வாரமும் மரண எண்ணிக்கை 800ஐ தாண்டுகிறது. மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் மரண எண்ணிக்கையவிட இது அதிகம்.
அந்நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு நெருக்குதல் அதிகரித்தால் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது, வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையைச் செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மீண்டும் கொண்டுவருவது குறித்து தாம் பரிசீலிக்கப்போவதாக திரு ஜான்சன் முன்னதாகக் கூறியிருந்தார்.