கொவிட்-19: நான்கு மில்லியன் பேர் வசிக்கும் சீன நகர் முடக்கம்

சீனாவின் காங்சு மாநிலத்தின் ஸாங்யி நகரில் அக்டோபர் 23ஆம் தேதி, கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும் குடியிருப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி

நான்கு மில்லியன் பேர் வசிக்கும் நகர் ஒன்றை சீனா இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) முடக்கியுள்ளது.

வடமேற்கு சீனாவில் உள்ள லான்ஸோவ் எனும் அந்த நகரில் அவசரத் தேவைகளைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

லான்ஸோவில் ஆறு பேர் உட்பட சீனாவில் புதிதாக வெறும் 29 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக உருவெடுத்திருக்கும் கிருமித்தொற்றுக் குழுமத்தை ஒழிக்கும் நோக்கில் லான்ஸோவ் முடக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிறுதியில் கொவிட்-19 தொற்று முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாடு கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதை அடுத்து, தொற்றுப் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பொருளியலும் மீட்சியடைந்து வருகிறது.

எனினும், கொவிட்-19 கிருமியுடன் சேர்ந்து வாழ மற்ற உலக நாடுகள் பழகிவரும் வேளையில், கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் அணுகுமுறையை சீனா இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுவிட்டால், அதைப் பரவவிடாமல் சீனா அப்பகுதியை முடக்கிவிடுகிறது.

ஆக அண்மையில் சீனாவில் உருவெடுத்துள்ள இந்தக் கிருமித்தொற்றுக் குழுமம், வேகமாகப் பரவும் டெல்டா வகை கிருமியுடன் தொடர்புடையது.

சீனா
முடக்கம்
கிருமித்தொற்றுக் குழுமம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!