சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் கூடினாலும், நாட்டின் ஒட்டுமொத்த மரண விகிதம் அதிகமாகவில்லை.
கொரோனா காரணமாக மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய முதியவர்கள்.
கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் வேறு விதமான உடல்நிலை கோளாறு காரணமாக அவர்கள் மரணமடைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே இதற்கான காரணம்.
இதை ‘மாற்று மரணக் கோட்பாடு’ என்று குறிப்பிட்டு தொற்றுநோய் வல்லுநர்கள் இருவர் கருத்துக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். அந்தக் கட்டுரை இன்று (நவம்பர் 6) வெளியிடப்பட்டது.
இவ்வாண்டு மாண்டவர்கள் விகிதம், கொவிட்-19க்கு முந்தைய 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளின் அளவைவிட குறைவு. 2019, 2020ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அது சற்று அதிகம்.
சிங்கப்பூரின் மரண விகிதம் இந்த ஆண்டில் 100,000 பேருக்கு ஏறத்தாழ 530ஆக இருக்கிறது.