சினோவேக், சினோஃபார்ம் போட்டுக்கொண்டோருக்கு மூன்றாவது ஊசி கட்டாயம்

படம்: சாவ்பாவ்

சினோவேக், சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளைப் போட்டுக்கொண்டுள்ள 70,000 பேர், இம்மாதம் 31ஆம் தேதிக்குள் 3வது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாவது ஊசியைப் போட்டுக்கொண்டால் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ற தகுதிநிலையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அவர்கள் தக்கவைத்துக்கொள்ளலாம்.

அவ்விரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருந்து, அடுத்த ஆண்டு 13 வயதை எட்டும் குழந்தைகள் மூன்றாவது ஊசியைப் போட்டுக்கொள்வதற்கான கால அவகாசம் மேலும் இரு மாதங்களுக்கு, அதாவது 2022 மார்ச் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில், மூன்று மாதங்களுக்குமுன் சினோவேக்-கொரோனாவேக் அல்லது சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் போட்டுக்கொண்டவர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், மருத்துவ அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் எனில், இந்தப் பிரிவினர் மூன்றாவது தவணையின்போது ‘எம்ஆர்என்ஏ’ வகையைச் சேர்ந்த ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சு பெரிதும் ஊக்குவிக்கிறது.

முதல்முறை ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசி போட்டபின் ஒவ்வாமை ஏற்பட்டு, இரண்டாவதாக சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவது முறையும் சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகையோர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட 28 நாள்களுக்குள் மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே ‘முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்’ என்ற தகுதிநிலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!