கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு 17 பேருக்கு ‘ஓமிக்ரான்’ தொற்று எனச் சந்தேகம்

லூயிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் பார் எனும் இந்த உணவகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. படம்: ராய்ட்டர்ஸ்

ஓஸ்லோ: கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் குறைந்தது 17 பேருக்கு ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களில் கூடுதலானவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களது பரிசோதனை மாதிரிகளில் மரபணுப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘ஓமிக்ரான்’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

“பிசிஆர் பரிசோதனைகளில் இதுவரை 60 பேருக்கும் ஆன்டிஜன் பரிசோதனைகளில் நால்வருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது,” என்று ஓஸ்லோ நகர அதிகாரிகள் இன்று (டிசம்பர் 3) தெரிவித்தனர்.

ஓமிக்ரான்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!