'ஓமிக்ரான்' தொற்றியவர் தப்பிச் சென்றார்

பெங்களூரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பயணி ஒருவருக்குக் கிருமிப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் இரண்டு ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் கர்நாடகாவில் நேற்று உறுதிசெய்யப்பட்டன. அந்த நபர்களில் ஒருவர் நாட்டைவிட்டு தப்பி ஓடினார் என்று கர்நாடக அமைச்சர் ஆர்.அஷோக் இன்று கூறினார்.

கர்நாடகாவில் 'ஓமிக்ரான்' வகைக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவரில் ஒருவர், தனியார் ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்ட கிருமிப் பரிசோதனையில் கொவிட்-19 இல்லை என்று கூறிய முடிவைப் பயன்படுத்தி துபாய்க்கு 'தப்பி ஓடிவிட்டார்'.

அவரைத் தவிர, கிருமிப் பரிசோதனை செய்துகொள்ளாமல் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து காணாமல் போன மேலும் பத்து பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

'ஓமிக்ரான்' குறித்து இன்று (டிசம்பர் 3) நடந்த உயர்மட்டக் கூட்டத்துக்குப் பின்னர், கர்நாடகாவின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் அஷோக் இதைத் தெரிவித்தார்.

அந்த 66 வயது நபர் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா சென்றார்.

அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. கொவிட்-19 தொற்று இல்லை என்று காட்டிய கிருமிப் பரிசோதனைச் சான்றிதழும் அவரிடம் இருந்தது.

ஆனால் ஷாங்ரிலா ஹோட்டலில் தங்கிய அவருக்குக் கொவிட்-19 தொற்று இருந்தது மறுநாள் உறுதிசெய்யப்பட்டது. தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அவரிடம் மருத்துவர்கள் கூறினர்.

தொற்று அபாயமுள்ள நாட்டிலிருந்து வந்ததால் அவரது பரிசோதனை மாதிரிகள் மரபணுச் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

ஆனால் நவம்பர் 23ஆம் தேதி தனியார் பரிசோதனைக்கூடத்தில் சோதனை செய்து, தொற்றில்லை என்ற சான்றிதழை அந்த நபர் பெற்றார்.

அதைப் பயன்படுத்தி, 27ஆம் தேதி அந்த நபர் துபாய் புறப்பட்டார்.

அதன் பின்னர்தான் அவருக்கு ஓமிக்ரான் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

அவருடன் தொடர்பு கொண்ட 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்புகொண்ட 240 பேருக்கும் கிருமித் தொற்றில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து காணாமல் போன பத்து பேரும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று திரு அஷோக் குறிப்பிட்டார்.

அவர்கள் தங்கள் கைபேசிகளை அடைத்து வைத்துள்ளதால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்றைக்குள் அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கிருமிப் பரிசோதனை செய்யப்படும் என்று திரு அஷோக் சொன்னார்.

#ஓமிக்ரான்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!