கொவிட்-19 தொற்று; எலி கடி காரணமா என விசாரணை

படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: ஒரு மாதத்திற்கும் மேலாக தைவானில் உள்ளூர் கிருமித்தொற்றுப் பாதிப்பு பதிவாகாத நிலையில், ஆய்வக ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தைவானின் முன்னணி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் அந்த 20 வயது பெண்மணி வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்றும் அவர் மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று சுகாதார அமைச்சர் சொன்னார்.

ஆய்வக எலி ஒன்று அவரைக் கடித்ததாகவும் அதன் காரணமாக அவரைக் கிருமி தொற்றி இருக்குமோ என்ற கோணத்தில் ஆராயப்பட்டு வருவதாக கிருமி ஆய்வின் மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.

அப்பெண்ணை டெல்டா கிருமி தொற்றியிருக்கும் என்று நம்பப்படுவதாக தைவான் அதிகாரிகள் கூறினர்.

சீனாவைப்போல் கிருமிப் பரவலை முற்றிலும் துடைத்தொழிக்கும் தைவானின் முயற்சிக்குப் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. தைவானில் கடைசியாக நவம்பர் 5ஆம் தேதி கிருமித்தொற்று பதிவாகி இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!