ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 பயணிகளில் 53 பேர் ‘விடிஎல்’ மூலம் சிங்கப்பூர் வந்தனர்

ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த பயணிகளில் 65 பேரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

அந்த 65 பேரில் 53 பேர், தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் நடத்தப்படும் ‘பிசிஆர்’ பரிசோதனையில், அந்த 53 பேரில் 41 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டின் மேம்படுத்தப்பட்ட பரிசோதனை திட்டத்தின் மூலம் எஞ்சிய 12 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கேட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.

ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, புதிய ‘விடிஎல்’ விமான, பேருந்துப் பயணச்சீட்டுகளின் விற்பனை டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை ஒருமாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை (டிசம்பர் 22) அறிவித்து இருந்தது.

பல நாடுகளில் ஓமிக்ரான் திரிபு பரவிவரும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் 76 பேரிடம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!